< Back
மாநில செய்திகள்
கால்நடை மருத்துவ முகாம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
19 Feb 2023 2:12 AM IST

நாங்குநேரி அருகே கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

இட்டமொழி:

நாங்குநேரி அருகே உள்ள சிங்கநேரியில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை பஞ்சாயத்து தலைவர் முத்துசொர்ணம் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் தங்கராஜ் முன்னிலை வகித்தார். கால்நடை டாக்டர் ரஞ்சித், கால்நடை ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் மகேஸ்வரி ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் ஊர் பிரமுகர் ராஜாமணி பண்ணையார், டி.வி.எஸ். அறக்கட்டளை களப்பணியாளர் உஷா ஆகியோர் கலந்து கொண்டனர். சிறந்த கால்நடைகள் வளர்த்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்