ராணிப்பேட்டை
கால்நடை மருத்துவ முகாம்
|சிறுணமல்லி ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
நெமிலி ஒன்றியம், சிறுணமல்லி ஊராட்சிக்கு உட்பட்ட பூதேரி பகுதியில், நெமிலி கால்நடை மருந்தகம் மூலம் கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில் 200 மாடுகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசியும், 61 கால்நடைகளுக்கு ஆவின் தாது உப்பு கலவையும், 25 மாடுகளுக்கு சினை பரிசோதனையும், 10 மாடுகளுக்கு சினை ஊசியும் போடப்பட்டது. கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டது.
முகாமை ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி அருணாச்சலம் தொடங்கி வைத்தார். உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர். நெமிலி கால்நடை உதவி மருத்துவர் சுப்பிரமணியன் தலைமையில், கால்நடை ஆய்வாளர் சிவக்குமார், கால்நடை பராமரிப்பு உதவியாளர் குமார், செயற்கை முறை கருவூட்டாளர் சுதாகர் ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். தனியார் வேளாண்மை கல்லூரி மாணவிகள் முகாம் குறித்து கிராம மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முடிவில் ஊராட்சி செயலாளர் நன்றி கூறினார்.