< Back
மாநில செய்திகள்
கால்நடை மருத்துவ முகாம்
தென்காசி
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
30 Dec 2022 12:15 AM IST

கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

கடையம்:

கோவிந்தபேரி ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம், ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. கால்நடை உதவி மருத்துவர் பிரதீபா தலைமையில் கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, கருவூட்டல், குடற்புழு நீக்கம், சிகிச்சை மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. சிறந்த முறையில் கால்நடைகளை வளர்த்த பயனாளிகள் 9 பேருக்கு பரிசு வழங்கப்பட்டது. வார்டு உறுப்பினர் இசக்கி பாண்டியன், இரஜகன்னி, முன்னாள் கவுன்சிலர் அரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்