< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
கால்நடை மருத்துவ முகாம்
|30 Nov 2022 1:33 AM IST
திருப்பரங்குன்றம் அருகே எலியார்பத்தியில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் அருகே எலியார்பத்தியில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் கலந்து கொண்டு கால்நடை மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார். கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் சரவணன் மேற்பார்வையில் கால்நடை உதவி மருத்துவர் அருண் சங்கர், உதவியாளர் தேவி ஆகியோர் கால்நடைகளுக்கு பரிசோதனை செய்தனர். முகாமில் 500-க்கும் மேற்பட்ட ஆடு, மாடு, கோழிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது.