< Back
மாநில செய்திகள்
கால்நடை மருத்துவ முகாம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
19 Sept 2022 2:37 AM IST

கும்பகோணம், திருவிடைமருதூர் பகுதிகளில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது

கும்பகோணம் அருகே உத்தமதானி கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கான மலடு நீக்க சிகிச்சை முகாம் நடைபெற்றது. கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் டாக்டர் தமிழ்செல்வன் உத்தரவின்பேரில், உதவி இயக்குனர் டாக்டர் கண்ணன் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த முகாமில் கால்நடை டாக்டர் பிரகாஷ் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆடு, மாடுகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

இதேபோல, கும்பகோணம் அருகே உள்ள கொற்கை ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பசுக்களுக்கு மலடு நீக்க சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமுக்கு ஊராட்சி தலைவர் பகவான்தாஸ் தலைமை தாங்கினார். முகாமில் கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம், மலடு சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், சினையுறா பசுக்களுக்கு சிறப்பு சிகிச்சை ஆகியவை அளிக்கப்பட்டது. கால்நடை உதவி மருத்துவர் சுதாரோஸ் தலைமையில் கால்நடை ஆய்வாளர்கள் ஜெகதீஷ், மணியன், சங்கரி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் ராமாமிர்தம் ஆகியோர் சிகிச்சை அளித்தனர். முகாமில் ஊராட்சி துணைத் தலைவர் சாரங்கன், ஊராட்சி செயலாளர் செந்தில் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்