< Back
மாநில செய்திகள்
கால்நடை மருத்துவ முகாம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
22 Oct 2023 12:15 AM IST

கோவில்பட்டி அருகே கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

கோவில்பட்டி (மேற்கு):

கோவில்பட்டி அருகே உள்ள மூப்பன்பட்டி கிராமத்தில் கால்நடை மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் லிங்கேஸ்வரி தலைமை தாங்கினார். தூத்துக்குடி கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் டாக்டர் சங்கர நாராயணன் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் டாக்டர் கண்ணபிரான் தலைமையில் மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு 60 பசுக்கள், 270 வெள்ளாடுகள், 197 கோழிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, தடுப்பூசி செலுத்தினர். 6 சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பஞ்சாயத்து தலைவர் பரிசு வழங்கினார். முகாம் ஏற்பாடுகளை பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ரமேஷ் மூர்த்தி செய்திருந்தார்.

மேலும் செய்திகள்