< Back
மாநில செய்திகள்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்
கால்நடை மருத்துவ முகாம்
|15 Oct 2023 12:15 AM IST
திட்டை ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
சீர்காழி:
சீர்காழி அருகே திட்டை ஊராட்சியில் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட உதவி இயக்குனர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். திட்டை ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி வரவேற்றார். முகாமை உதவி இயக்குனர் ஈஸ்வரன் தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து கால்நடை டாக்டர்கள் ராமபிரபா, சேஷகிரி மற்றும் செவிலியர்கள் கொண்ட குழுவினர் சுமார் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கால்நடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் அன்பரசன் நன்றி கூறினார்.