நாகப்பட்டினம்
கால்நடை மருத்துவ முகாம்
|மணக்காடு ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
வாய்மேடு:
தலைஞாயிறு ஒன்றியம் மணக்குடி ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் விஜயகுமார் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் அசன் இப்ராஹிம், ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கால்நடை உதவி டாக்டர் ஸ்ரீீதர்பாபு வரவேற்றார். முகாமில் கால்நடைகளுக்கு நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், சிகிச்சை, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்கம், கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், ஆடு மற்றும் கோழிகளுக்கு தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது. இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற்றன, இதில் சிறந்த கால்நடை பராமரிப்பு உரிமையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டன. முகாமில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட அதிகாரிகள், டாக்டர் ராதா, கால்நடை ஆய்வாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர் மற்றும் ஊராட்சி செயலர் வார்டு உறுப்பினர்கள், கால்நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.