< Back
மாநில செய்திகள்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வஸ்திர மரியாதை
திருச்சி
மாநில செய்திகள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வஸ்திர மரியாதை

தினத்தந்தி
|
5 Dec 2022 2:13 AM IST

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வஸ்திர மரியாதை அளிக்கப்பட்டது.

வஸ்திர மரியாதை

திருச்சி ஸ்ரீரங்கத்தில் கி.பி. 1320-ம் ஆண்டு நடந்த மாற்று மதத்தவரின் படையெடுப்பின் காரணமாக சுமார் 40 ஆண்டு காலம் ஸ்ரீரங்கம் கோவில் நம்பெருமாள் திருமலை கோவிலில் வைத்து பாதுகாக்கப்பட்டார். இவ்வாறு அவர் வைக்கப்பட்டிருந்த மண்டபம் திருமலை கோவிலில் ரெங்கநாயகலு மண்டபம் என்னும் பெயரில் இன்றும் உள்ளது. நம்பெருமாள் திருமலையில் இருந்த ரெங்கநாயகலு மண்டபத்தில் தான் அந்த கோவிலின் முக்கிய நிகழ்வுகள் பல இன்றளவும் நடைபெறுகின்றன.

மேலும் திருமலைக்கும், ஸ்ரீரங்கத்துக்கும் நீண்ட காலமாக மங்கல பொருட்கள் பரிவர்த்தனை இருந்தது. காலப்போக்கில் அவை நின்று போயின. தற்போது அவை ஒவ்வொன்றாக புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆண்டுதோறும் கைசிக ஏகாதசி நாளில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் இருந்து புது வஸ்திர மரியாதைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

வீதி உலா

அதன்படி இந்த ஆண்டு ரெங்கநாதர் மூலவர், நம்பெருமாள் உற்சவர், ஸ்ரீரெங்கநாச்சியார் மற்றும் ராமானுஜருக்கு வஸ்திரங்கள், குடைகள், மரியாதைகளை திருமலை திருப்பதி தேவஸ்தான கண்காணிப்பாளர் உமாமகேஸ்வரரெட்டி, சொர்ணலதாரெட்டி ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு எடுத்து வந்தனர்.

இதைத்ெதாடர்ந்து நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உள்ள ஸ்ரீரங்க விலாச மண்டபத்தில் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த திருப்பதி வஸ்திர மரியாதை காலை 7 மணிக்கு புறப்பட்டு வீதி உலா வந்தது. பின்னர் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் இருந்து வஸ்திர மரியாதையை கருட மண்டபத்தில் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர் சுந்தர்பட்டர், உள்துறை கண்காணிப்பாளர் மோகன், உதவி கண்காணிப்பாளர் கிருஷ்ணா மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்