< Back
தமிழக செய்திகள்

தமிழக செய்திகள்
அடுத்த 3 மணிநேரத்தில் 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை ...!

9 Nov 2023 7:09 AM IST
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
சென்னை,
குமரிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (9.11.2023) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை, நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.