கரூர்
மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பம் சரிபார்க்கும் பணி
|மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பம் சரிபார்க்கும் பணி நடந்தது.
அரவக்குறிச்சி, கடவூர் ஆகிய வட்டத்திற்குட்பட்ட தடாகோவில், புங்கம்பாடி மேல்பாகம், காமராஜர் நகர், பள்ளப்பட்டி அப்பீஸ் நகர், ஷாநகர், சீத்தப்பட்டி, தரகம்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்களை களப்பணியாளர்கள் வீடு வீடாக நேரில் சென்று சரிபார்க்கும் பணியினை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
களப்பணியாளர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று ஆதார் எண், மின் கட்டணம், குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் விவரம், சொந்தமாக வைத்திருக்கும் வாகனங்களின் விவரம் ,மேலும் ஆண்டு வருமானம் தொடர்பான விவரங்களை சேகரித்து அதற்கான தனிச்செயலியில் பதிவேற்றம் செய்யப்படும் இப்பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை பார்வையிட்டு களப்பணியாளர்களிடம் தங்களுக்கு ஒரு நாளைக்கு எத்தனை மனுக்களை விசாரிக்க வேண்டும் என்ற பட்டியலை நாள்தோறும் தேர்வு செய்து பணிகளை விரைவாகவும், சரியான விவரங்களையும் செயலியில் பதிவேற்றம் செய்ய களப்பணியாளர்களுக்கு ஆலோசனைகளை கலெக்டர் வழங்கினார்.