< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
மகளிர் உரிமை தொகை திட்டத்தில்விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணிதாசில்தார் ஆய்வு
|6 Sept 2023 12:15 AM IST
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணியை தாசில்தார் ஆய்வு செய்தாா்.
விக்கிரவாண்டி,
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதாந்திர உதவி தொகை வழங்கும் திட்டத்தை வருகிற 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், வீடுகள் தோறும் சென்று அதிகாரிகள் விண்ணப்பங்களை சரிபார்த்து வருகிறார்கள். அந்த வகையில், விக்கிரவாண்டி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் பணியை தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன்படி, விக்கிரவாண்டி, கஞ்சனூர், அதனூர், நந்திவாடி, பக்கிரிபாளையம், வழுதாவூர் ஆகிய கிராமங்களுக்கு நேரடியாக சென்று அவர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, வருவாய் ஆய்வாளர்கள் தெய்வீகன், நாகராஜன், வினோத் மற்றும் களபணியாளர்கள் உடனிருந்தனர்.