< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கில் நாளை தீர்ப்பு
|24 Aug 2023 9:52 PM IST
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை ஐகோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
புதுடெல்லி,
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை ஐகோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. முன்னதாக மேல்முறையீட்டு மனுக்கள் மீது 7 நாட்கள் நடைபெற்ற வாதங்களுக்குப் பிறகு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு ஆகஸ்ட் 25-ந்தேதி(நாளை) காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது. நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி சபீக் முகமது ஆகியோர் அடங்கிய அமர்வில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.