< Back
மாநில செய்திகள்
மயிலாப்பூரில் துணிகரம்; வடமாநில ஊழியருக்கு கத்திக்குத்து - செல்போன்கள் கொள்ளை
சென்னை
மாநில செய்திகள்

மயிலாப்பூரில் துணிகரம்; வடமாநில ஊழியருக்கு கத்திக்குத்து - செல்போன்கள் கொள்ளை

தினத்தந்தி
|
7 Sept 2023 12:36 PM IST

மயிலாப்பூரில் வடமாநில ஊழியரை கத்தியால் குத்தி விட்டு செல்போன்களை கொள்ளையடித்து சென்ற கொள்ளையனை போலீசார் தேடிவருகின்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் குமார் புயியன் (வயது 31). இவர் சென்னை மயிலாப்பூர் நீதியரசர் சுந்தரம் சாலையில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்கிறார். அங்கு தனது நண்பர்களோடு தங்கி இருந்து வேலை பார்க்கிறார். நேற்று அதிகாலையில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் அங்கு வந்து தூங்கிக்கொண்டிருந்த ஊழியர்களின் 5 செல்போன்களை திருடிக்கொண்டு தப்பி ஓடினார். இதை பார்த்த குமார் புயியன் மர்ம நபரை விரட்டி பிடிக்க முயற்சித்தார். அப்போது அவரது வயிற்றில் கத்தியால் குத்திவிட்டு மர்ம நபர் செல்போன்களுடன் தப்பி ஓடிவிட்டார்.

கத்திக்குத்தில் காயம் அடைந்த குமார் புயியன் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொள்ளையனை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்