< Back
மாநில செய்திகள்
கோவில்பட்டியில் துணிகரம்:சாலையில் நடந்து சென்றபெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு
தூத்துக்குடி
மாநில செய்திகள்

கோவில்பட்டியில் துணிகரம்:சாலையில் நடந்து சென்றபெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு

தினத்தந்தி
|
8 Sept 2023 12:15 AM IST

கோவில்பட்டியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறித்து சென்ற மர்ம வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் பேரனுடன் கோவிலுக்கு சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் சங்கிலிைய பறித்து கொண்டு தலைமறைவான வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.

கோவிலுக்கு...

கோவில்பட்டியை அடுத்துள்ள மந்தித்தோப்பு அண்ணாமலை நகரில் குடியிருப்பவர் பேர்முகம் (வயது 52). இவருடைய மனைவி சுப்புலட்சுமி (48). இவர் நேற்று மாலை 5.30 மணியளவில், தனது 10 வயது பேரனுடன் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக மேலரத வீதி வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது சுப்புலட்சுமியை பின் தொடர்ந்து மர்ம வாலிபர் ெசன்றுள்ளார்.

சங்கிலி பறிப்பு

கோவில் அருகே சென்று கொண்டிருந்த சுப்புலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை அந்த வாலிபர் பறித்துள்ளார். பதறிப்போன சங்கிலியை வாலிபரிடம் இருந்து மீட்க ேபாராடியுள்ளார். ஆனால் அவரது கையை தட்டிவிட்டு அந்த வாலிபர் தப்பி ஓடியுள்ளார். இதனால் சுப்புலட்சுமி திருடன்...திருடன் என கூச்சலிட்டுள்ளார். இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, வாலிபரை துரத்தியுள்ளனர். ஆனால் அந்த வாலிபர் வேகமாக ஓடி தப்பி ெசன்று விட்டார். இதுகுறித்து சுப்புலட்சுமி அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் காந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

வாலிபருக்கு வலைவீச்சு

மேலும், கோவில்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை தேடிவருகின்றனர்.

கோவிலுக்கு சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கிலியை மர்ம வாலிபர் பறித்து ெசன்ற சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்