< Back
மாநில செய்திகள்
கோடம்பாக்கத்தில் துணிகரம்; மளிகை கடைக்காரரிடம் தங்க சங்கிலி பறிப்பு - 2 பேர் கைது
சென்னை
மாநில செய்திகள்

கோடம்பாக்கத்தில் துணிகரம்; மளிகை கடைக்காரரிடம் தங்க சங்கிலி பறிப்பு - 2 பேர் கைது

தினத்தந்தி
|
7 Sept 2023 12:23 PM IST

கோடம்பாக்கத்தில் மளிகை கடைக்காரரிடம் தங்க சங்கிலி பறிப்பில் ஈடுப்பட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்,

சென்னை கோடம்பாக்கம் காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 21). இவர் தனது தந்தையுடன் சேர்ந்து அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, இவர் கடையை பூட்டிவிட்டு சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த 3 பேர், கத்தியை காட்டி மிரட்டி, தமிழ்செல்வன் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துச் சென்றுவிட்டனர்.

இது தொடர்பாக கோடம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். தங்க சங்கிலியை பறித்ததாக செங்குன்றத்தைச்சேர்ந்த அபிஷேக் (27), கோடம்பாக்கத்தைச்சேர்ந்த ரிஷி (24) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து தங்க சங்கிலி மீட்கப்பட்டது.

மேலும் செய்திகள்