< Back
மாநில செய்திகள்
வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
25 March 2023 6:54 PM GMT

வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தை அடுத்த கீழப்புலியூரில் உள்ள புலியூர் திருப்பதி தலமான ஸ்ரீதேவி, பூமாதேவி, கோதாதேவி, பத்மாவதி சமேத வெங்கடேசபெருமாள் கோவில் புதுப்பிக்கப்பட்டு, நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் 9.45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று காலை கோபூஜை, பாலாலய திருவாராதனம், மகாசுதர்சன ஹோமத்துடன் தொடங்கியது. விமான கோபுர கலச திருமஞ்சனம் மற்றும் பிரதிஷ்டை நடைபெற்றது. மாலையில் விஷ்வக் சேன ஆராதனம், வாஸ்துசாந்தி பூஜைகள் நடந்தன. யாகசாலை பூஜைகளை கும்பகோணம் திவ்யதேச தலமான சாரநாத சுவாமி பெருமாள் கோவில் பட்டாச்சாரியார் ராமன்பட்டர் மற்றும் புலியூர் திருப்பதி கோவில் ஸ்தானீகர் டி.என்.கோபாலன் அய்யங்கார், வாஸ்து மற்றும் ஜோதிட நிபுணர் ஸ்ரீராம் ஆதித்யா மற்றும் பட்டாச்சாரியர் குழுவினர் நடத்தி வருகின்றனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரை திவ்ய பிரபந்த சேவை, யாகசாலை பிரவேசம், கும்ப ஸ்தாபனம், முதற்காலஹோமம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு பெருமாள் தாயார் ஸ்நபன திருமஞ்சனம், மாலை 6 மணி முதல் 2-வது கால யாகசாலை பூஜைகள் சாற்றுமறை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நாளை (திங்கட்கிழமை) காலை 5.30 மணி முதல் மகாசாந்திஹோமம், காலை 9 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு, 9.45 மணிக்கு விமான சம்ப்ரோசனமும், 10.15 மணிக்கு மூலவர் சம்ப்ரோசனமும், மகாதீபாராதனையும் நடக்கிறது. மதியம் 12.30 மணிக்கு தளிகை அம்சை, பெரியசாற்றுமறை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலை 5 மணிக்கு வெங்கடேசபெருமாள்-தாயார் திருக்கல்யாண நிகழ்ச்சியும், பெருமாள் உபயநாச்சியார், உடையவர் திருவீதி உலாவும் நடக்கிறது.

மேலும் செய்திகள்