< Back
மாநில செய்திகள்
வேங்கைவயல் வழக்கு: இறையூர் கிராமத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாட்சிகளிடம் தீவிர விசாரணை
மாநில செய்திகள்

வேங்கைவயல் வழக்கு: இறையூர் கிராமத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாட்சிகளிடம் தீவிர விசாரணை

தினத்தந்தி
|
2 May 2023 2:32 PM IST

வேங்கைவயல் மற்றும் இறையூர் கிராமங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு, கடந்த 4 மாதங்களாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில், இதுவரை 147 பேரிடம் விசாரணை முடிந்து சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான ஒரு நபர் ஆணையம் வரும் 6-ந்தேதி விசாரணையை தொடங்க உள்ளது.

இந்த நிலையில் தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வேங்கைவயல் மற்றும் இறையூர் கிராமங்களில் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். ஊருக்கு வெளியே தடுப்புகள் அமைக்கப்பட்டு, வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்ல முடியாதபடி தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சம்பவ தினத்தன்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு அருகில் இருந்த சாட்சிகள் அனைவரிடமும் டி.எஸ்.பி. பால்பாண்டி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


மேலும் செய்திகள்