< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வேங்கைவயல் சம்பவம்: கெடு விதித்த ஐகோர்ட்டு - இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் சிபிசிஐடி
|14 July 2024 10:04 PM IST
இரண்டு வாரத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு கெடு விதித்தது.
சென்னை,
வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த சம்பவம் அரங்கேறி இரண்டு வருடங்கள் கடந்தும் குற்றவாளிகள் கண்டுபிடிக்காதது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.
மூன்று குற்றவாளிகளை சந்தேகித்து இருப்பதாக சிபிசிஐடி தரப்பில் கூறப்பட்ட நிலையில், இரண்டு வாரத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் கெடு விதித்தது. ஒருவாரம் முடிவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து உயர் அதிகாரிகளுடன் சிபிசிஐடி ஐஜி அன்பு ஆலோசனை நடத்தினார்.
மணமேல்குடி காவலர் முரளிராஜாவிடம் குரல் மாதிரி பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள இரண்டு பேரிடம் உடனடியாக விசாரணை செய்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.