புதுக்கோட்டை
வேங்கைவயல் வழக்கு விசாரணை
|வேங்கைவயல் வழக்கு விசாரணை 3-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. குடிநீர் தொட்டியில் அசுத்தத்தை கலந்த நபர்களை பிடிக்க அறிவியல் ரீதியான தடயங்களை சேகரித்து வருகின்றனர். இதற்காக அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்காக அனுமதி பெற்று பரிசோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மேலும் 6 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி கோரி புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவுக்கு கோர்ட்டு அனுமதி அளித்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட 6 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணை 3-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.