< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வேங்கைவயல் வழக்கு: டிஎன்ஏ பரிசோதனை கட்டாயம் - கோர்ட்டு தீர்ப்பு
|4 July 2023 3:37 PM IST
வேங்கைவயல் வழக்கில் பரிசோதனைக்கு வர மறுத்த 8 பேருக்கும் கண்டிப்பாக டிஎன்ஏ பரிசோதனை எடுக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக 8 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, வேங்கைவயல் விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த 8 பேருக்கும், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நாளை டிஎன்ஏ பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. வேங்கைவயலை சேர்ந்த 8 பேரும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜரான நிலையில், நாளை டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள நீதிபதி ஜெயந்தி அறிவுறுத்தியுள்ளார்.
குற்றவாளிகளை கண்டறிய டிஎன்ஏ பரிசோதனை நடத்த வேண்டும் என்று சிபிசிஐடி சம்மன் அனுப்பிய நிலையில், 8 பேரும் அதனை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.