வேங்கைவயல் விவகாரம் - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் - புதுக்கோட்டையில் பரபரப்பு
|குடிநீர் தொட்டியில் கழிவுநீர் கலந்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மர்ம ஆசாமிகள் அசுத்தம் கலந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
இந்தநிலையில், குடிநீர் தொட்டியில் கழிவுநீர் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடிநீர் தொட்டியை உடைக்க முயன்றவர்களை கைது செய்யவில்லை எனவும் கண்டனம் தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்றவாளிகள் அடையாளம் தெரிந்தும் போலீசார் அவர்களை கைது செய்யாமல் எங்களை குற்றவாளிகள் போல் சித்தரித்து வருவதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.