< Back
மாநில செய்திகள்
வேங்கைவயல் விவகாரம்: புதுக்கோட்டை போலீஸ் சூப்பிரண்டுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

வேங்கைவயல் விவகாரம்: புதுக்கோட்டை போலீஸ் சூப்பிரண்டுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

தினத்தந்தி
|
9 March 2023 12:15 AM IST

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை போலீஸ் சூப்பிரண்டுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் வழங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?, வழக்கின் விசாரணை தொடர்பாக 4 வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நோட்டீசை அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்