< Back
மாநில செய்திகள்
வேங்கைவயல் விவகாரம்: 150 நாட்களாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

வேங்கைவயல் விவகாரம்: 150 நாட்களாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை

தினத்தந்தி
|
10 Jun 2023 12:06 AM IST

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக 150 நாட்களாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என பா.ஜனதா மாநில நிர்வாகி குற்றம்சாட்டினார்.

புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் புதுக்கோட்டையில் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் பேசுகையில், ''நாட்டின் கலாசாரம், பண்பாட்டை வெளி உலகிற்கு அறியும் வகையில் செய்தவர் பிரதமர் மோடி. தமிழர்களின் பெருமை சாற்றும் வகையிலான செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்ததை இங்குள்ளவர்கள் அரசியல் காரணமாக எதிர்க்கின்றனர். புதுக்கோட்டை கலெக்டர் முகாம் அலுவலகத்தில் விநாயகர் சிலை விவகாரம் சரியான செயல் அல்ல. வேங்கைவயல் விவகாரத்தில் 150 நாட்கள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. ஜல்லிக்கட்டு தடைகளை உடைத்தெறிந்த கட்சி பா.ஜனதா மட்டும் தான்'' என்றார். தொடர்ந்து மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் பேசினர்.

மேலும் செய்திகள்