விருதுநகர்
வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பில் ஜமாபந்தி
|வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
வெம்பக்கோட்டை
வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. தாசில்தார் ரங்கநாதன் முன்னிலை வகித்தார். தனி தாசில்தார் ரெங்கசாமி வரவேற்றார். நதிகுடி, புலிப்பாறைப்பட்டி, பி.திருவெங்கடபுரம், கொங்கன்குளம், கல்லமநாயக்கர்பட்டி, எதிர்க்கோட்டை, இ.டி.ரெட்டியாபட்டி, குண்டாயிருப்பு, முத்துசாமிபுரம், ராமுதேவன்பட்டி, டி.கரிசல்குளம், கீழாண்மறைநாடு, ஆகிய பகுதிகளை ேசர்ந்த 51 பேர் மனுக்கள் அளித்தனர்.
இதில் 10 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. அப்போது மருத்துவத்துறையின் சார்பில் மருத்துவ முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
வத்திராயிருப்பு
வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது. இதில் 57 பேர் மனு அளித்தனர். இதில் சில மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் பிரித்திவிராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சங்கர் எஸ்.நாராயணன், வத்திராயிருப்பு தாசில்தார் உமா மகேஷ்வரி, தனிவட்டாட்சியர் சின்னதுரை மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.