< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வேலூர்: காட்பாடியில் பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் புகை.!
|20 Oct 2023 7:59 PM IST
வேலூர் அருகே பிரேக் கோளாறு காரணமாக பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்,
சென்னையில் இருந்து மங்களூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடி ரெயில் சந்திப்பு அருகே வந்தபோது ரயிலின் எஸ்-2 பெட்டியின் அடியில் இருந்து திடீரென புகை வந்தது.
இதையடுத்து காட்பாடி ரெயில் நிலையத்தில் ரெயிலை நிறுத்தி ரெயில்வே அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள், புகை வந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது பிரேக் கோளாறு காரணமாக புகை வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடைமேடையில் இருந்து சிறிது தூரம் ரெயிலைக் கடக்கச் செய்து, பிரேக் கோளாறு சரி செய்யப்பட்டது. இதனால், பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் 30 நிமிடம் காலத்தாமதமாக மங்களூர் நோக்கி புறப்பட்டது.