< Back
மாநில செய்திகள்
வேலூரில் மாரத்தான் ஓட்டம், சைக்கிள் போட்டி
வேலூர்
மாநில செய்திகள்

வேலூரில் மாரத்தான் ஓட்டம், சைக்கிள் போட்டி

தினத்தந்தி
|
5 Feb 2023 5:03 PM GMT

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் சார்பில் வேலூரில் நடந்த மாரத்தான் ஓட்டம், சைக்கிள் போட்டியை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாரத்தான் ஓட்டம்

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் சார்பில் இளைஞர்கள் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக மாரத்தான் ஓட்டம், சைக்கிள் போட்டி ஆகியவை வேலூர் சிப்பாய் புரட்சி நினைவுத்தூண் அருகே நேற்று நடைபெற்றது. வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி மாரத்தான் ஓட்டம், சைக்கிள் போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக மாரத்தான் ஓட்டம், சைக்கிள் போட்டிகள் நடத்தப்பட்டன. சைக்கிள் போட்டியில் டி.ஐ.ஜி. முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் பங்கேற்று சிறிதுதூரம் சைக்கிள் ஓட்டினார்கள்.

ஆர்வத்துடன் பங்கேற்பு

வேலூரில் இருந்து தொடங்கிய சைக்கிள் போட்டி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திலும், மாரத்தான் போட்டி காட்பாடி சன்பீம் சி.பி.எஸ்.இ. பள்ளியின் அருகேயும் நிறைவு பெற்றது. இதில், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் விஜயராகவன், ஜூனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை துணைவேந்தர் ஆறுமுகம் வழங்கினார்.

மேலும் செய்திகள்