< Back
மாநில செய்திகள்
வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேச பிரபா சஸ்பெண்ட்
மாநில செய்திகள்

வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேச பிரபா சஸ்பெண்ட்

தினத்தந்தி
|
1 March 2024 11:15 AM IST

வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேச பிரபாவை சஸ்பெண்ட் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேச பிரபாவை சஸ்பெண்ட் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தேர்வு பணிகளில் சுணக்கமாக இருந்ததால் கல்வித்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

தேர்வு பணிகளில் சுணக்கமாக இருந்தாலோ, முறைகேடுகளுக்கு உடந்தை போனாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்