< Back
மாநில செய்திகள்
வெள்ளோடு ஊராட்சி தொடக்கப்பள்ளியில்முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்
ஈரோடு
மாநில செய்திகள்

வெள்ளோடு ஊராட்சி தொடக்கப்பள்ளியில்முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்

தினத்தந்தி
|
26 Aug 2023 3:27 AM IST

வெள்ளோடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.

சென்னிமலை

வெள்ளோடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.

காலை உணவு திட்டம்

சென்னிமலை அருகே வெள்ளோடு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.

கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மணீஷ், சென்னிமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் காயத்ரி இளங்கோ, சென்னிமலை வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ப.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நலத்திட்ட உதவிகள்

தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

முன்னதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ரூ.21 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வெள்ளோடு நில வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பை அமைச்சர் திறந்து வைத்தார். மேலும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பிலான மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, 10 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பிலான முதியோர் உதவித்தொகை, 12 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 72 ஆயிரத்து 800 மதிப்பில் ஆதரவற்ற விதவைகளுக்கான உதவித்தொகை மற்றும் 10 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா மாறுதல் ஆணை என மொத்தம் 38 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 42 ஆயிரத்து 800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வி.குட்டப்பாளையம் ஊராட்சியில் தானியங்கி நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.18 லட்சம் மதிப்பில் மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு தானியங்கி கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் பணியை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.

Related Tags :
மேலும் செய்திகள்