< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வேளாங்கண்ணி ஆலய தேரோட்டம்: பெசன்ட் நகரில் இன்று போக்குவரத்து மாற்றம்
|7 Sept 2022 4:52 PM IST
வேளாங்கண்ணி ஆலய தேரோட்டத்தை முன்னிட்டு பெசன்ட் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய தேரோட்டத்தை முன்னிட்டு இன்று பல்வேறு சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பெசன்ட் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
குறிப்பாக, திரு.வி.க பாலம் வழியாக பெசன்ட் நகர் பேருந்து நிலையத்திற்கு செல்ல எல்.பி சாலை வழியாகச் செல்லலாம் என்றும், 7வது அவென்யூ மற்றும் எம்ஜி சாலை சந்திப்பில இருந்து அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் செல்ல அனுமதி இல்லை.
இதேபோல், எம்எல் பூங்காவில் இருந்து பெசன்ட் அவென்யூ வழியாக பேருந்து நிலையம் செல்ல மாநகரப் பேருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.