< Back
மாநில செய்திகள்
வேளாங்கண்ணி திருவிழா: செகந்திராபாத்- வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில்
மாநில செய்திகள்

வேளாங்கண்ணி திருவிழா: செகந்திராபாத்- வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில்

தினத்தந்தி
|
25 Aug 2023 4:37 PM IST

வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு செகந்திராபாத்- வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

வேளாங்கண்ணி,

இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயமும் ஒன்று. தமிழகத்தில் மிகச்சிறந்த ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கும் இந்த பேராலயத்துக்கு தினந்தோறும் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து செல்கிறார்கள்.

இந்த வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டு திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இதில் உலகம் முழுவதில் இருந்தும் கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள். சிலர் பாத யாத்திரையாக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்து விழாவில் பங்கேற்பார்கள். இதன்படி இந்த ஆண்டு பேராலய விழா வருகிற 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பேராலய விழாவையொட்டி, பக்தர்களின் வருகைக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு செகந்திராபாத்- வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

இந்த சிறப்பு ரெயிலானது செப்டம்பர் 4-ம் தேதி தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து காலை 8.40 மணிக்கு புறப்படும் என்றும், செப்டம்பர் 6-ல் வேளாங்கண்ணியில் இருந்து செகந்திராபாத்திற்கு மதியம் 12.30 மணிக்கு புறப்படும் என்றும் தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்