< Back
மாநில செய்திகள்
வேளச்சேரி ஈரடுக்கு மேம்பாலம் - இன்று திறந்து வைக்கிறார் முதல் அமைச்சர்
மாநில செய்திகள்

வேளச்சேரி ஈரடுக்கு மேம்பாலம் - இன்று திறந்து வைக்கிறார் முதல் அமைச்சர்

தினத்தந்தி
|
17 Sept 2022 8:20 AM IST

வேளச்சேரி ஈரடுக்கு மேம்பாலத்தின் மற்றொரு வழித்தட பணிகள் நிறைவடைந்துள்ளது.

சென்னை,

தரமணி - வேளச்சேரி விரைவு சாலை வழித்தடத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1-ந் தேதி முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேம்பாலத்தில் மாநகராட்சி சார்பில் 45 லட்சம் ரூபாய் செலவில் 82 கம்பங்கள் நட்டு மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது ஈரடுக்கு மேம்பாலத்தில் மற்றொரு வழித்தட பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

இந்த மேம்பாலத்தின் முலம் வேளச்சேரி விஜயநகர் சந்திப்பு, தண்டீஸ்வரம் நகர், காந்தி சாலை பகுதியில் வாகன நெரிசல் குறையும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்