< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வேளச்சேரி - சென்னை கடற்கரை ரெயில் பயணம்: வெளியான தகவல்
|11 Sept 2023 10:26 PM IST
நான்காவது வழித்தடம் அமைக்கும் பணியின் காரணமாக இந்த வழித்தடத்தில் தற்போது சிந்தாதரிப்பேட்டையில் இருந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை,
சென்னை கடற்கரை - வேளச்சேரி வழித்தட புறநகர் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு சிந்தாதரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரிக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் 10 நிமிடத்திற்கு ஒரு ரெயில் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிந்தாதரிப்பேட்டை முதல் வேளச்சேரிக்கு 25 நிமிடத்திற்கு ஒரு ரெயில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை எழும்பூர் முதல் கடற்கரை வரை நான்காவது வழித்தடம் அமைக்கும் பணியின் காரணமாக இந்த வழித்தடத்தில் தற்போது சிந்தாதரிப்பேட்டையில் இருந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், சென்னை கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 2.30 லட்சம் பேர் பயணம் செய்து வந்த நிலையில் தற்போது சராசரியாக நாள் ஒன்றுக்கு வெறும் 55 ஆயிரம் நபர்கள் மட்டுமே பயணம் மேற்கொள்ளவதாக தகவல் வெளியாகியுள்ளது.