< Back
மாநில செய்திகள்
கும்பக்கரை அருவிக்கு இன்று வாகனங்கள் கட்டணமின்றி செல்ல அனுமதி
தேனி
மாநில செய்திகள்

கும்பக்கரை அருவிக்கு இன்று வாகனங்கள் கட்டணமின்றி செல்ல அனுமதி

தினத்தந்தி
|
8 Oct 2023 7:15 AM IST

கும்பக்கரை அருவிக்கு இன்று வாகனங்கள் கட்டணமின்றி செல்ல அனுமதிக்கப்பட்டது.

பெரியகுளம் அருகே இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவிக்கு தினமும் தேனி மட்டுமின்றி, வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்கின்றனர். இந்த அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை சார்பில் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர். இதற்கிடையே கீழவடகரை ஊராட்சி சார்பில் கும்பக்கரை அருவிக்கு செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. வன உயிரின வார விழாவை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வாகனங்களும் கட்டணமின்றி செல்லலாம் என்று கீழவடகரை ஊராட்சி சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்