< Back
மாநில செய்திகள்
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வாகன சோதனை
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வாகன சோதனை

தினத்தந்தி
|
24 May 2022 6:30 PM GMT

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வாகன சோதனை நடத்தப்பட்டது.

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க குடிமைபொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு கடந்த 4 மாதங்களில் சுமார் 80 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, 30-க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்துஉள்ளனர்.

இந்தநிலையில் ஆந்திர மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தலை முழுமையாக தடுக்க குடிமைபொருள் வழங்கல் குற்றபுலனாய்வு துறை டி.ஜி.பி. ஆபாஷ்குமார் உத்தரவின்படி, போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில், நேற்று வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி ஆகிய பகுதிகளிலிலும், ஆந்திர எல்லையிலும் தனிப்படைகளை அமைத்து தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.

அப்போது பஸ்கள், கார், லாரி, இருசக்கர வாகனங்களை குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். மேலும் இதுபோன்ற குற்றங்களில் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related Tags :
மேலும் செய்திகள்