ராமநாதபுரம்
பாம்பனில் வாகன சோதனை; 296 மதுபாட்டில்களுடன் 2 பேர் சிக்கினர்
|பாம்பனில் நடந்த வாகன சோதனையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் 296 மதுபாட்டில்களுடன் சிக்கினார்கள்.
ராமேசுவரம்,
பாம்பனில் நடந்த வாகன சோதனையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் 296 மதுபாட்டில்களுடன் சிக்கினார்கள்.
வாகன சோதனை
ராம்நாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் ராமேசுவரம் துணை சூப்பிரண்டு உமாதேவி தலைமையில் பாம்பன் ரோடு பாலத்தின் நுழைவு பகுதியில் பாம்பன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் உள்ளிட்ட போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரோடு பாலத்தில் இருந்து ராமேசுவரம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அவர்கள் வைத்திருந்த சாக்குப்பையை பரிசோதித்த போது, அதில் மதுபாட்டில்கள் குவியல், குவியலாக கிடந்தது. மொத்தம் 296 மதுபாட்டில்கள் கிடந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
2 பேர் கைது
இது தொடர்பாக விசாரித்த போது, ேமாட்டார் சைக்கிளில் வந்தவர்கள் ராமேசுவரம் புதுரோடு மற்றும் கரையூர் பகுதியை சேர்ந்த அருண் பாண்டியன் (வயது 21), குமார் (27) ஆகியோர் என்பதும், உச்சிப்புளி அருகே உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதற்காக கொண்டு சென்ற போது போலீசில் சிக்கியதும் தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.