< Back
மாநில செய்திகள்
குறைந்த நீர் நிர்வாகத்தில் அதிக மகசூல் தரும் பீர்க்கங்காய்
திருப்பூர்
மாநில செய்திகள்

குறைந்த நீர் நிர்வாகத்தில் அதிக மகசூல் தரும் பீர்க்கங்காய்

தினத்தந்தி
|
23 July 2022 12:29 AM IST

முத்தூர் பகுதிகளில் குறைந்த நீர் நிர்வாகத்தில் அதிக மகசூல் தரும் பீர்க்கங்காய் இந்த ஆண்டு அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.


முத்தூர் பகுதிகளில் குறைந்த நீர் நிர்வாகத்தில் அதிக மகசூல் தரும் பீர்க்கங்காய் இந்த ஆண்டு அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

பீர்க்கன்காய் சாகுபடி

முத்தூர், சின்னமுத்தூர், ஊடையம் வேலம்பாளையம், ராசாத்தாவலசு, வள்ளியரச்சல்,

பூமாண்டன் வலசு, வேலம்பாளையம், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் விவசாயம் பிரதான தொழில்களாக செய்யப்பட்டு வருகின்றன. பவானிசாகர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜனவரி, ஆகஸ்டு மாதங்களில் இரு பிரிவுகளாக திறந்து விடப்படும் தண்ணீரை கொண்டு சாகுபடி செய்யப்படுகிறது.

இப்பகுதி விவசாயிகள் குறைந்த நீர் நிர்வாகத்தில் அதிக மகசூலுடன் கூடுதல் வருமானம் மற்றும் கூடுதல் சாகுபடி பலன் தரும் பீர்க்கங்காய் சாகுபடி அதிக அளவில் செய்து உள்ளனர். விவசாயிகள் தங்கள் வயல்களில் ½ ஏக்கர் முதல் 2 ஏக்கர் பரப்பளவு வரை தனியாகவும், ஊடுபயிராகவும் பரவலாக பீர்க்கங்காய் சாகுபடி செய்து உள்ளனர். தற்போது பீர்க்கன்காய் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.

இது பற்றி விவசாயிகள் கூறியதாவது:-

விற்பனை

பொதுவாக பீர்க்கங்காய் கோடை காலத்தில் சாகுபடி செய்தாலும் பருவ கால சூழ்நிலைக்கேற்ப கூடுதல் பலன் தரக்கூடியது. பீர்க்கங்காய்கள் முத்தூர், நத்தக்காடையூர், அரச்சலூர், காங்கயம், வெள்ளகோவில், சிவகிரி, கந்தசாமி பாளையம் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவைகளை மொத்தமாக வாங்கும் வியாபாரிகள் கிலோ அளவில் செய்கின்றனர். இதன்படி தற்போது பீர்க்கங்காய் ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இப்பகுதி விவசாயிகள் வேளாண் சாகுபடியில் குறுகிய காலத்தில், குறைந்த நீர் நிர்வாகத்தில், அதிக மகசூல் தரும் பீர்க்கங்காய் சாகுபடி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் செய்து உள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்