< Back
மாநில செய்திகள்
வீரியகாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

வீரியகாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தினத்தந்தி
|
16 Feb 2023 7:00 PM GMT

நிலக்கோட்டை அருகே வீரியகாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

நிலக்கோட்டை அருகே முசுவனூத்து கிராமத்தில் மிகவும் பழமையான வீரியகாரியம்மன், காசிவிஸ்வநாதர், அறுபடைவேல் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் கும்பாபிஷேக விழா 12 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது. இதையொட்டி பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் வாணவேடிக்கை, தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்பு கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, 2-ம் காலபூஜை, கோபூஜை, அக்னிஹோமம், மகா சாந்தி ஹோமங்கள் நடத்தப்பட்டன.

அதைத்தொடர்ந்து கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது வானில் கருடன் வட்டமிட்டதை பார்த்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர். பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. விழாவில் சென்னை, மதுரை, கோவை, திண்டுக்கல், நெல்லை மற்றும் கர்நாடகா, கேரள மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்