< Back
மாநில செய்திகள்
வீரட்டானேஸ்வரர் கோவில் தேரோட்டம்
கடலூர்
மாநில செய்திகள்

வீரட்டானேஸ்வரர் கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
12 Jun 2022 1:02 AM IST

பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் தேரோ ட்டத்தை வேல்முருகன் எம்.எல்.ஏ. வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

பண்ருட்டி,

வைகாசி பெருவிழா

பண்ருட்டி திருவதிகையில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திரிபுர சம்ஹார வைகாசி பெருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி தினமும் காலை, மாலை இருவேளையும் சாமி, அம்மனுக்கு அபிஷேகம், விசேஷ பூஜைகள், தீபாராதனை மற்றும் பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் மாட வீதி உலாவும் நடைபெற்றது.

தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி காலை 7.45 மணியளவில் பெரியநாயகி அம்மன், திரிபுர சம்ஹார மூர்த்தி தனித்தனி தேரில் எழுந்தருளினர். பின்னர் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், நகரசபைத் தலைவர் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் எம்.சி.தாமோதரன், எம்.சி.தண்டபாணி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து மேளதாளம், சங்கொலி முழங்க அங்கே திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய, அரோகரா என பக்தி கோஷம் எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் மாட வீதி வழியாக சென்று 9 மணி அளவில் நிலையை வந்தடைந்தது.

முப்புரம் எரித்த காட்சி

பின்னர் இரவு 7 மணியளவில் திரிபுர சம்ஹார மூர்த்தி திருத்தேரில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருள செய்து வாணவேடிக்கை நடைபெற்றது. பின்னர் சரநாராயண பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வைதீக முறைப்படி முப்புரம் எரித்த காட்சி நடைபெற்றது. விழாவில் கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத், எம்.சி.தங்கமணி, மாவட்ட தி.மு.க. துணை செயலாளர்கள் தணிகைச்செல்வம், ஆனந்தி சரவணன், எஸ்.வி.ஜூவல்லர்ஸ் வைரக்கண்ணு, எஸ்.வி.அருள், பண்ருட்டி வள்ளி விலாஸ் தங்கமாளிகை சரவணன், சபாபதி செட்டியார், தொழில் வர்த்தக சங்கத் தலைவர் சண்முகம் சம்பத்லால் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்செய்தனர்.

மேலும் செய்திகள்