< Back
மாநில செய்திகள்
வீரட்டானேஸ்வரர் கோவில் தேரோட்டம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

வீரட்டானேஸ்வரர் கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
6 March 2023 6:45 PM GMT

திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் கீழையூரில் பிரசித்தி பெற்ற சிவானந்தவல்லி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சாமி வீதிஉலா நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று மாசி மகத்தையொட்டி தேர்திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி சாமிக்கு பால், தயிர், இளநீர், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தேரை வடம்பிடித்து இழுத்தனர்

இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் சாமி எழுந்தருளினார். அப்போது அங்கிருந்த பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. முன்னதாக விழாவை உபயதாரர்கள் மலேசிய தொழிலதிபர் கல்பனாதேவி, கே.ராகவேல் மற்றும் கே.மனோகரன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் திருக்கோவிலூர் நகர மன்ற தலைவர் டி.என்.முருகன், நகராட்சி கவுன்சிலர்கள் சி.ஆர்.சம்பத், ஐ.ஆர்.கோவிந்தராஜன், காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.வி.முருகன், பைனான்சியர் வைத்தீஸ்வரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்