< Back
மாநில செய்திகள்
வீரபாண்டி அரசு கல்லூரியில்மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா
தேனி
மாநில செய்திகள்

வீரபாண்டி அரசு கல்லூரியில்மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா

தினத்தந்தி
|
31 May 2023 12:15 AM IST

வீரபாண்டி அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.

தேனி அருகே உள்ள வீரபாண்டி அரசு கலை அறிவியல் கல்லூரியில் கடந்த 22-ந் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாராயணமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் 13 தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளை தேர்வு செய்தனர். இதில் 130 மாணவர்கள் தேர்வாகினர். இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் உமாதேவி தலைமை தாங்கி பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்