< Back
மாநில செய்திகள்
வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா
தென்காசி
மாநில செய்திகள்

வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா

தினத்தந்தி
|
12 July 2023 12:15 AM IST

தென்காசி மாவட்டத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

கடையநல்லூர்:

கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தில் யாதவ சமுதாய இளைஞர்கள் சார்பில் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்திற்கு முன்னாள் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை, நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான், தி.மு.க. நகரச் செயலாளர் அப்பாஸ், ஒன்றிய துணை சேர்மன் ஐவேந்திரன் தினேஷ், கவுன்சிலர் சிங்கிலிபட்டி மணிகண்டன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் கவுன்சிலர் முருகன், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட தலைவர் செல்லத்துரை உள்பட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் சங்கர குமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அபுதாஹிர், மாவட்ட பொதுச் செயலாளர் முகமது ரபீக், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் ரமேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட துணைச் செயலாளர் பொய்கை மாரியப்பன், பொருளாளர் சண்முகம், கடையநல்லூர் நகர செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பா.ஜ.க. சார்பில் மாவட்ட பொதுச் செயலாளர் ராமநாதன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட பிரிவு தலைவர் குத்தாலிங்கம், நகர தலைவர் சுப்பிரமணியன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் கணேசன் தலைமையில் மரியாதை செலுத்தினார். தொகுதி பொருளாளர் முருகராஜ், கொள்கை பரப்பு செயலாளர் பசும்பொன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் யாதவர் சமுதாய பிரமுகர் மாவடிக்கால் சண்முகவேல் ஏழை-எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

மேலும் செய்திகள்