< Back
மாநில செய்திகள்
வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி
மாநில செய்திகள்

வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
17 Jun 2022 7:39 PM IST

ஆர்ப்பாட்டம் protest

திருச்சி, ஜூன்.18-

தமிழர் தேசம் கட்சி மற்றும் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கே.கே.செல்வகுமார் மீது திருச்சி புறநகர் மாவட்ட காவல்துறையினர் பொய் வழக்கு பதிந்ததாகவும், இதனை கண்டித்தும் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் வைரவேல் தலைமை தாங்கினார். தமிழர் தேசம் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன், மாநில பொதுச்செயலாளர் தளவாய் ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டு, கே.கே.செல்வகுமார் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையை கண்டித்தும், அவர் மீது போடப்பட்ட வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினார்கள்.

மேலும் செய்திகள்