< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
வேட்டைக்காரன் சுவாமி கோவில் திருவிழா
|21 Sept 2022 1:15 AM IST
நத்தம் அருகே சேத்தூர் கிராமம் மொட்டமலைக்கு தென்புரம் வேட்டைக்காரன் சுவாமி கோவில் திருவிழா நடைபெற்றது.
நத்தம் அருகே சேத்தூர் கிராமம் மொட்டமலைக்கு தென்புரம் வேட்டைக்காரன், குட்டுக்கருப்பன் சுவாமி கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களில் கடந்த 2 நாட்கள் திருவிழா நடந்தது. இதில் முதல் நாள் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மறுநாள் கிடாய்கள் பலியிடப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டார கிராம பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் நத்தம் ஒன்றியகுழு தலைவர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இலுப்பட்டி, மொட்டமலைப்பட்டி, அரவங்குறிச்சி, விளாம்பட்டி, துத்திப்பட்டி, வேலூர், கணவாய்பட்டி ஆகிய 8 கிராம பொதுமக்கள் மற்றும் பூசாரி வகையறாக்கள் செய்திருந்தனர்.