< Back
மாநில செய்திகள்
வி.சி.க. கவுன்சிலர் கட்சியில் இருந்து இடைநீக்கம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

வி.சி.க. கவுன்சிலர் கட்சியில் இருந்து இடைநீக்கம்

தினத்தந்தி
|
8 Jan 2023 12:51 AM IST

வி.சி.க. கவுன்சிலர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் நகர செயலாளராக தங்க.சண்முகசுந்தரம் என்பவர் பதவி வகித்து வந்தார். மேலும் இவர் பெரம்பலூர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 8-வது வார்டில் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனார். இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி கவுன்சிலர் தங்க.சண்முகசுந்தரம், 9-வது வார்டில் வசித்து வரும் கட்சியின் மண்டல செயலாளர் இரா.கிட்டுவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் அவரை தகாத வார்த்தையால் திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கட்சியின் விதிகளுக்கு எதிராகவும், கட்டுப்பாட்டை மீறியும் தங்க.சண்முகசுந்தரம் செயல்பட்டிருக்கிறார் என்பது கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை கட்சியில் இருந்து 3 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்தும், அவர் இதுகுறித்து கட்சியின் தலைமையிடத்தில் மேல்முறையீடு செய்ய 15 நாட்களுக்கு பின்னர் அனுமதிக்கப்படுவார் என்றும் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்