< Back
மாநில செய்திகள்
வி.சி.க. மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி வழங்கக் கோரி டி.ஜி.பி. சைலேந்திர பாபுவிடம் மனு
மாநில செய்திகள்

வி.சி.க. மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி வழங்கக் கோரி டி.ஜி.பி. சைலேந்திர பாபுவிடம் மனு

தினத்தந்தி
|
30 Sept 2022 5:59 PM IST

வி.சி.க. நடத்தும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி வழங்கக் கோரி டி.ஜி.பி.யிடம் மனு அளிக்கப்பட்டது.

சென்னை,

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி மற்றும் வி.சி.க. சார்பில் நடைபெற இருந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்க தமிழக காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை காரணமாக ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வி.சி.க. சார்பில் நடத்தப்படும் மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி வழங்கக் கோரி டி.ஜி.பி. சைலேந்திர பாபுவிடம் இன்று மனு அளிக்கப்பட்டது. சென்னையில் டி.ஜி.பி.யை நேரில் சந்தித்து வி.சி.க. தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் மனுவை அளித்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், மதவாத சக்திகளை எதிர்த்து மத நல்லிணக்கத்தை வற்புறுத்தக் கூடிய தங்கள் இயக்கத்திற்கு அனுமதி கொடுப்பது தான் பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய திருமாவளவன், காந்தியடிகளுக்காக தாங்கள் நடத்தும் மனித சங்கிலியை தடை செய்வது காந்தியடிகளையே தடை செய்வதாக அர்த்தம் என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்