< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
அனுமதி இன்றி வைக்கப்பட்ட வி.சி.க. கொடிக்கம்பம் அகற்றம்
|16 May 2023 12:15 AM IST
சின்னசேலம் அருகே அனுமதி இன்றி வைக்கப்பட்ட வி.சி.க. கொடிக்கம்பம் அகற்றம்
சின்னசேலம்
சின்னசேலம் அருகே சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அ.வாசுதேவனூர் பஸ் நிறுத்தத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடிக்கம்பம் அமைத்திருந்தனர். அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தை அகற்றுமாறு விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் தாசில்தார் இந்திரா, வருவாய் துறையினர் மற்றும் போலீசார் கூறியதற்கு அவர்கள் கொடி கம்பத்தை எடுக்க விட மாட்டோம் என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அந்த வழியாக ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அந்த கம்பத்தில் கொடியை ஏற்றிவிட்டு சென்றார். இதற்கிடையே அனுமதியின்றி வைக்கப்பட்ட வி.சி.க. கொடிக்கம்பத்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்துறையினர் அகற்றினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.