< Back
மாநில செய்திகள்
விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்
மாநில செய்திகள்

விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்

தினத்தந்தி
|
31 July 2024 7:46 AM GMT

விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மயிலாடுதுறை,

கடந்த 2003-ம் ஆண்டு மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதமாற்ற தடை சட்டத்தை கண்டித்து திருமாவளவன் தலைமையில் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து கலவரம் தொடர்பாக மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் ஆஜராகும்படி திருமாவளவனுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் திருமாவளவன் வழக்கில் ஆஜராகாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில், இன்று வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.விஜயகுமாரி விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். வழக்கில் சம்மன் அனுப்பியும் திருமாவளவன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தது மற்றும் வழக்கறிஞர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் மனுத்தாக்கல் செய்யாமல் இருந்தது உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி இந்த பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்