< Back
மாநில செய்திகள்
நல்ல விஷயத்திற்காக அ.தி.மு.க.வை வி.சி.க. அழைத்துள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மாநில செய்திகள்

'நல்ல விஷயத்திற்காக அ.தி.மு.க.வை வி.சி.க. அழைத்துள்ளது' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தினத்தந்தி
|
10 Sept 2024 3:00 PM IST

நல்ல விஷயத்திற்காக அ.தி.மு.க.வை வி.சி.க. அழைத்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு வரும் அக்டோபர் 2 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அ.தி.மு.க.வும் பங்கேற்கலாம் என்றும், மக்கள் பிரச்சினைக்காக சாதிய, மதவாத சக்திகள் தவிர பிற எந்த சக்திகளோடும் இணைவோம் என்றும் வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதி.மு.க.வை வி.சி.க. அழைத்திருப்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "நல்ல விஷயத்திற்காக வி.சி.க. அழைத்துள்ளது. அந்த அழைப்பை ஏற்று அ.தி.மு.க. சென்றால் நல்லதுதான். அவர்கள் ஒன்று சேர்ந்து மாநாடு நடத்துவதில் எந்த தவறும் இல்லை. மது ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை அரசாங்கமும் செய்து கொண்டுதான் இருக்கிறது" என்று தெரிவித்தார்.


மேலும் செய்திகள்