< Back
மாநில செய்திகள்
வி.சி.க. மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க. பங்கேற்குமா? - ஜெயக்குமார் பதில்
மாநில செய்திகள்

வி.சி.க. மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க. பங்கேற்குமா? - ஜெயக்குமார் பதில்

தினத்தந்தி
|
16 Sept 2024 6:57 AM IST

அ.தி.மு.க. என்பது மிகப்பெரிய இயக்கம் என்று ஜெயக்குமார் கூறினார்.

சென்னை,

சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

வி.சி.க. தலைவர் திருமாவளவன் பொதுநல நோக்கத்தோடு மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறோம் என்று சொல்லி இருக்கிறார். இது வரவேற்கத்தக்கது. ஆனால் அ.தி.மு.க. என்பது மிகப்பெரிய இயக்கம். எனவே எங்கள் கட்சிக்கு என்று ஒரு வரைமுறை இருக்கிறது. எனவே நேரில் சந்தித்து, இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தால் அதுபற்றி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான், தற்போது அமெரிக்கா சென்று வந்திருக்கிறார். இந்த பயணத்தால் என்ன தாக்கம்? எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின? இதனால் எத்தனை நிறுவனங்கள் செயலாக்கம் பெற்றுள்ளன? என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்